×

4 வழிச்சாலைக்காக பொக்லைன் மூலம் நெல் விதைத்திருந்த நிலத்தில் பள்ளம் தோண்டும் பணி தீவிரம்

தரங்கம்பாடி: தரங்கம்பாடி அருகே எருக்கட்டாஞ்சேரியில் நான்கு வழிச்சாலைக்காக நெல் விதைக்கப்பட்டிருந்த விவசாய நிலத்தில் பொக்லைன் இயந்திரம் கொண்டு பள்ளம் தோண்டப்பட்டதால் அதிர்ச்சியடைந்த விவசாயிகள் ஒன்று திரண்டதால் பரபரப்பு ஏற்பட்டது. அதிகாரிகள் பேச்சுவார்த்தையில் தோண்டும் பணி தற்காலிகமாக நிறுத்தப்பட்டது. மயிலாடுதுறை மாவட்டம், தரங்கம்பாடி அருகே எருக்கட்டாஞ்சேரியில் விவசாயி செந்தில் என்பவருக்கு சொந்தமான விவசாய நிலத்தில் இந்த தோண்டும் பணி நடைபெற்றது. பணி தொடங்குவது குறித்து தனக்கு அதிகாரிகள் தகவல் அளிக்காமல் நெல் விதைப்பில் இயந்திரம் மூலம் பள்ளம் தோண்டுவதால் விவசாயம் பாதிக்கப்படுகிறது என அவர் குற்றம்சாட்டினார்.

மேலும் நான்கு வழிச்சாலையில் நிலம் கையகப்படுத்தியது போதிய தொகை இல்லை என்றும், இது தொடர்பாக வழக்கு உள்ள நிலையில் திடீரென்று பணியை துவங்கியதற்கு கண்டனம் தெரிவித்து விவசாயிகள் திரண்டு முற்றுகையிட்டதால் அங்கு வந்த நெடுஞ்சாலைத்துறை தாசில்தார் மற்றும் பொறையார் போலீசார் விவாசாயிகளிடம் பேச்சுவார்த்தை நடத்தினர். இதையடுத்து தற்காலிகமாக தோண்டும் பணி நிறுத்தப்பட்டது.

Tags : land ,Bokline , 4 lane, Bokline, paddy seed
× RELATED தனியார் தோட்ட வன நிலம் ஆக்கிரமிக்க...